Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Monday, October 28, 2013

Androit மொபைல் மூலம் கணணிகளில் இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

1:12 PM
         
  இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம்
இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.

எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

  • மொபைலில் Setting மெனுவுக்கு போகவும்.
  • அடுத்து Wireless and Network செல்லவும்.
  • அடுத்து Tethering and portable hotspot செல்லவும்.
  • அதில் சிறிய portable wi-fi hotspot setting என்பது கானப்படும். அதை கிளிக் செய்யவும்.
  • இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும். அதில் configure portable wi-fi  hotspot என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர் கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள் பெயரை வைத்து கொள்ளலாம்.
  • அடுத்த மெனு Security இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த Open என்பதை தேர்தெடுக்கலாம். 
  • குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து கொள்ளலாம். பிறகு save கொடுக்கவும்.

மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் செய்யவும். இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற சிம்பல் கானப்படும். அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது. இனி உங்கள்  Laptop, Pc மற்றும் Tablet களில்  இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."