Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Wednesday, September 18, 2013

எச்சரிக்கை WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு Virus

2:41 PM


Smart Phone களுக்கான #WhatsAppApplication மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு
Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.


அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?


இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.






தீர்வு தான் என்ன?


Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.

எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.




நன்றி!




Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."