இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது.
எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது.
ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது.
ஐபோன் 5எஸ்
அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.
தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது.
வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன் இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமானதென அப்பிள் தெரிவிக்கின்றது.
4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது.
அப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது.
இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
இதன் விலை £549 -16GB , £709 - 64GB ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 5சி
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மாதிரியாக இதனைக் கருதமுடியும். பல காலமாக வதந்தியாகவே கருதப்பட்டு வந்த இது நேற்று ஊர்ஜிதமாகியது.
பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது.
இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.
'இதன் விலை £469 - 16GB , £549 -32GB ஆகும்
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.