புத்தம் புது தொழில்நுட்பங்களுடன் சாம்சங் கேலக்ஸி S5 வெளிவர இருக்கிறது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வருகிற பிப்ரவரி மாதம் 24-27ம் திகதிகளில் Mobile World Congress(MWC) கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போதே சாம்சங் கேலக்ஸி S5 வெளிவர இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், சமீபத்தில் கொரியாவின் சீயோல் நகரில் நடந்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் வடிவமைப்பில் புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம் போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கேலக்ஸி S5 இரண்டு மொடல்களில் வரும், ஒன்று முழுவதுமாக மெட்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும்.
மெட்டல் அமைப்பில் உருவாகும் போன் கேலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.
இதேநேரத்தில் 5 அங்குல தொடுதிரை, 4GB RAM, 64-bit Exynos 6 or Snapdragon 805 Processor, 16MP ISOCELL போன்ற அம்சங்களை கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."