எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து
அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%=="type your password here" goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.
இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சு செய்தால் Locker மறைந்து விடும்.
மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat என்ற கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கணனி திரையில் வரும்.
NOTE:- கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."