Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Wednesday, April 17, 2013

BPL மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் 22-23 வரை நடைபெறும் என உத்தியோகபூர்வ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2:08 PM
பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் (OBA) பாடசாலையின் நலன்கருதி வருடந்தோறும் நடத்தப்படும்  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் 22-23 வரை நடைபெறும்  என OBA  சங்கம் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்துள்ளது.
இச்சுற்றுப்போடியனது 2011 ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்துடன் இச்சுற்றுப்போட்டி மூன்றாவது ஆண்டு வருடத்தை எட்டியுள்ளது.
 முந்திக்கொள்ளும் 22 அணிகள் மாத்திரம்
இச்சுற்றுப்போட்டியில்  அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:-
* அணிக்கு ஆறு பேர் கொண்டது.
* ஐந்து ஓவர் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
* ஒருவருக்கு ஒரு ஓவர் வீதம் வீசப்பட வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்திற்குள் சமூகமளிக்காத அணி போட்டியில் இருந்து       நீக்கப்பட்டு எதிரணிக்கு வெற்றி வழங்கப்படும்.  
* கட்டணம்  1200/=.
* போட்டியின் ஒழுக்க விதிமுறைகளை மீரும்பட்சத்தில் அந்த அணி போட்டியில் இருந்து நீக்கப்படும்.
* நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
முந்திக்கொள்ளும் 22 அணிகள் மாத்திரம்                    
இச்சுற்றுப்போட்டியில்  அனுமதிக்கப்படும்.                             

காலம்:-  2013.06.22-23

குறிப்பு :-
* இதனால் கிடைக்கும் இலாபம் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நலன்கருதி பாடசாலைக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.