பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆபாச இணைய தளங்களை முடக்குவதற்கு ஏற்கனவே தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பயன்படுத்திய மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் கருத்திற் கொண்டு பேஸ் புக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."