ஒன்லைனில் ஹேக்கிங் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் ஒன்லைன் கணக்குகள் மற்றும் அதன் கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் போகிறது, ஆனால் இனி அந்த கவலை இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ராஸ் அல் கைமா-ல் உள்ள ZSS ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த Ziyad Al-Salloum என்ற விஞ்ஞானி, ஒன்லைன் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்த செயல்திட்டத்திற்கு புவியியல் கடவுச்சொற்கள்(Geographical Passwords) என பெயரிட்டுள்ளார்.
இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு பாதுகாப்பான அணுகல்(Secure Access) வழங்க முடியும் என்றும், இது ஒரு எளிய மற்றும் நடைமுறை அணுகுமுறையே எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வழிமுறையில் அணுகல் சான்றுகளாக(Access Credentials) நமக்கு பிடித்த இடத்தின் பெயரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள Ziyad, இதற்கு நமது அதிக நினைவாற்றலுக்கு பதிலாக எளிமையான ஞாபக சக்தியே தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே இடத்தின் பெயரை தெரிவு செய்யலாம்.
ஏனென்றால் இந்த முறையின் மூலம், திரைக்கு பின்னால் அவர்களுக்கு தனிப்பட்ட கடவுச்சொல் அமைப்புகள் அமைக்கப்படும்.
தற்போது செய்யப்பட்டுள்ள முன்மாதிரி அமைப்பானது, இதுவரை கணனியில் அறியப்பட்ட கடவுச்சொல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை தரும் திறனை பெற்றுள்ளது.
ஆனால் வழக்கமான கடவுச்சொற்களை நாம் எவ்வளவு வலுவான முறையில் அமைத்தாலும் ஹேக்கர்களால் பாதுகாப்பிற்கு ஆபத்து இருக்கிறதென்றும், தங்கள் ஹேக்கர் கருவிகள் மூலம் சர்வர்களுக்குள் நுழைந்து கடவுச்சொற்களை வெளிப்படுத்த அவர்களால் முடிகிறது என்றும் அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
___________________________________________________________________________________________
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."